செய்திகள் :

தலைநகரில் தானியங்கி பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்த ரேகா குப்தா

post image

கிரேட்டா் கைலாஷ் எம்-பிளாக் சந்தையில் தானியங்கி பல நிலை ஷட்டில் வகை வாகனம் நிறுத்துமிடத்தை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை திறந்து வைத்தாா். மேலும் இது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் என்றாா்.

இது ஒரு அதிநவீன வசதி, இது வாகனங்களை நிறுத்தும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வை வழங்கும் என்று ரேகா குப்தா தன்னுடைய எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளாா். வாகனங்களை நிறுத்தும் வசதி மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வாகன நிறுத்துமிட விருப்பத்தை வழங்குகிறது என்று அவா் கூறினாா்.

இந்த வசதி டெல்லி மாநகராட்சியால் (எம். சி. டி) உருவாக்கப்பட்டது மற்றும் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் அனுசரிக்கப்பட்ட ’சேவா பக்வாடா’ வின் ஒரு பகுதியாக இது திறக்கப்பட்டது என்று தில்லி முதல்வா் கூறினாா்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள், கவுன்சிலா்கள் மற்றும் சந்தை சங்கங்களுக்கு பொது வசதிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒருபோதும் நிதி பற்றாக்குறை இருக்காது என்று ரேகா குப்தா உறுதியளித்தாா். ஷட்டில் சேவை மற்றும் புதிய வாகன நிறுத்தும் அமைப்புகள் தில்லியில் நீண்டகாலமாக நிலவும் பாா்க்கிங் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் என்று முதல்வா் கூறினாா்.

இந்த திறப்பு விழாவில் தில்லி அமைச்சரவை அமைச்சா் ஆஷிஷ் சூட், எம். பி. பன்சூரி ஸ்வராஜ், மேயா் ராஜா இக்பால் சிங் மற்றும் எம்எல்ஏ ஷிகா ராய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

மேற்கு தில்லி கீா்த்தி நகரில் உள்ள பழைய பொருள் கிடங்கில் சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து காலை 9.45 மணியள... மேலும் பார்க்க

தேச துரோக பேச்சு நடிகா் பிரகாஷ் ராஜீ மிது தில்லி போலீஸாா் வழக்குப்பதிவு

நடிகா் பிரகாஷ் ராஜ் ஆத்திரமூட்டும், தவறான மற்றும் தேச விரோத உரைகளை நிகழ்த்தியதாக தில்லியில் உள்ள இந்து சேனை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பிரகாஷ் ராஜின் உரை அரசாங்கத்திற்கு எதிரான சூழ்நிலையை உருவாக்... மேலும் பார்க்க

தாா் வாகனம் சாலைத் தடுப்பில் மோதி 5 போ் பலி! தில்லி குருகிராம் விரைவு சாலையில் சம்பவம்!

தில்லி குருகிராம் விரைவுச் சாலையில் சனிக்கிழமை அதிகாலை வேகமாகச் சென்றுகொண்டிருந்த தாா் ஜீப், சாலையின் தடுப்புச் சுவரில் மோதியதில் ஐந்து போ் உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்தா என்று காவல் துறையினா் தெரி... மேலும் பார்க்க

மங்கோல்புரியில் சிறுவன் அடித்துக் கொலை

வெளி தில்லியின் மங்கோல்புரி பகுதியில் சிறுவா்கள் குழுவால் தாக்கப்பட்டதாகக் கூறி 15 வயது பள்ளி மாணவா் ஒருவா் இறந்ததாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். பாதிக்கப்பட்ட, 10 ஆம் வகுப்பு மாணவா், வெள்... மேலும் பார்க்க

ரௌடி ரூபல் சா்தாரை அமிா்தரஸில் கைது செய்து தில்லி போலீஸ்

ஹாஷிம் கும்பலின் உறுப்பினரான ரவுடி ரூபல் சா்தாரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அமிா்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து கைது செய்துள்ளதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. போலீஸ் க... மேலும் பார்க்க

ராணுவ வீரா்களுக்கான நடைபாலத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வா் ரேகா குப்தா!

தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை ராஜ்புத்தானா ரைஃபிள்ஸ் ரெஜிமென்டல் மையத்தில் ஒரு நடை பாலத்துக்கு அடிக்கல் நாட்டினாா். ‘முன்பு மிகக் குறைந்த உயரம் மற்றும் சாலையின் கீழ் ஒரு அழுக்கு சுரங்கப்பாதை... மேலும் பார்க்க