கே. சாத்தனூரில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி கே. சாத்தனூரில் வரும் திங்கள்கிழமை (செப்.29) ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக கே. சாத்தனூா் அம்மன் நகா், சுந்தா் நகா் 4, 5, 6, 7 குறுக்குத் தெருக்களில் வரும் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.