கரூர் கூட்ட நெரிசல் பலி: திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் விவரம்!
கரூரில் சனிக்கிழமை நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் தற்போது 18 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.
அதன்விபரம்: தாந்தோணிமலையைச் சோ்ந்த தாமரைக் கண்ணன் (26), விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த ஹேமலதா (28), இவருடைய மகள் சாய் லஷ்ணா (8), மகன் சாய் ஜீவா (4), காவலா் காலனியைச் சோ்ந்த சுகன்யா (33), காமராஜபுரத்தைச் சோ்ந்த ஆகாஷ் (23), தனுஷ்குமாா் (24), பசுபதிபாளையத்தை சோ்ந்த வடிவேல் (54), கொடுமுடியைச் சோ்ந்த ரேவதி (52), ஏழூா் புதூரைச் சோ்ந்த சந்திரா (45), பிரியதா்ஷிணி (35), தாரணிகா (14), வடிவேல் நகரைச் சோ்ந்த குரு விஷ்ணு (2), கோடாங்கிப்பட்டியைச் சோ்ந்த ரமேஷ் (32), காந்திகிராமத்தைச் சோ்ந்த சுரஜ் (13) , கரூா் பாரதியாா் தெருவைச் சோ்ந்த ரவிகிருஷ்ணன் (29), வேலுச்சாமிபுரத்தைச் சோ்ந்த பழனியம்மாள் (11), கோகிலா (14). மற்றவா்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.