செய்திகள் :

``துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்திலிருந்து அகலவில்லை'' - கரூர் சென்ற ஸ்டாலின்

post image

நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, நாமக்கல், சேலம், மதுரையில் இருந்தும் மருத்துவர்கள், செவிலியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷும் கரூர் சென்றார்கள்.

உயிரிழந்தவர்கள் | கரூர்
உயிரிழந்தவர்கள் | கரூர்

இன்று அதிகாலையிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் சென்றுவிட்டார்.

அங்கு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். சிகிச்சையில் இருப்பவர்களிடம் நலம் விசாரித்தார்.

அது குறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

`கூட்ட நெரிசல், மக்கள் மிதித்ததில் 2 வயது நிரம்பாத குழந்தை உயிரிழப்பு' - கரூர் துயர சம்பவம்

நேற்று நடந்த கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 1 3/4 வயது குழந்தை உயிரிழந்திருக்கிறது. இந்தக் குழந்தையின் பெயர் குரு விஷ்ணு. இவரது பெற்றோர் விமல், மாதேஸ்வரி. விமலின் அக்கா குரு விஷ்ணுவைப் பரப்புரைக்கு அ... மேலும் பார்க்க

கரூர்: `ஆளே அடையாளம் தெரியல காயமா இருக்கு, ஒருத்தன் போயிட்டான்; இன்னொருத்தன் எங்க?' -கதறும் உறவினர்

தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, நா... மேலும் பார்க்க

கரூர்: ``அடுத்த மாசம் கல்யாணம்; இப்போ பொண்ணு, மாப்பிள்ளை ரெண்டு பேருமே இல்லை'' - கதறும் குடும்பம்

அடுத்த மாதம் திருமணமாக இருந்த கரூரைச் சேர்ந்த கோகுலஶ்ரீயும், மதுரையைச் சேர்ந்த ஆகாஷும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று நடந்த தவெக தலைவர் விஜய் பரப்புரையைக் காணச் சென்றுள்ளனர். அங்கே ஏற்பட்ட ... மேலும் பார்க்க

கரூர்: ``காப்பாத்துங்கனு கத்துனோம்; போலீஸ் கூட உதவிக்கு வரல'' - உயிரிழந்தவரின் குடும்பம்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒருவரின் குடும்பத்தின் பகிர்வு... "என்னோட பேரு அபிநயஶ்ரீ. நாங்க கூட்டத்துக்கு 3.30 மணிக்கு மேலதான் வந்தோம். நாங்க விஜய் பேசுற இடத்துக்கிட்டதான் நின்னுகிட்டு இருந... மேலும் பார்க்க

``சொன்னது 10,000 பேர், வந்தது 25,000+; தண்ணீர், சாப்பாடு இல்லாமல்'' - கரூர் சம்பவம் குறித்து டிஜிபி

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 25,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 ப... மேலும் பார்க்க

கரூர் விஜய் பரப்புரை: இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை; ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எவ்வளவு?

நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பலர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்துள்ளனர். இதுவரை வெளியான தகவல்கள்: கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை... மேலும் பார்க்க