செய்திகள் :

கரூர்: `ஆளே அடையாளம் தெரியல காயமா இருக்கு, ஒருத்தன் போயிட்டான்; இன்னொருத்தன் எங்க?' -கதறும் உறவினர்

post image

தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, நாமக்கல், சேலம், மதுரையில் இருந்தும் மருத்துவர்கள், செவிலியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷும் கரூர் சென்றனர்.

விஜய்யின் கரூர் பிரசார நெரிசல்
விஜய்யின் கரூர் பிரசார நெரிசல்

இதற்கிடையில், இறந்தவர்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியிருக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களின் கதறலும் நெஞ்சை உறையவக்கிறது.

``எங்க அண்ணனுக்கு இரண்டு மகன்கள் அதில் மூத்த மகன் இறந்துட்டான். அவன் கண்ணுபுல்லா காயமா இருக்கு. ஆளே அடையாளம் தெரியாத மாதிரி போயிட்டான்.

இன்னொருத்தன் எங்க இருக்கான்னே தெரியல. எங்க அண்ணியும் ஐசியுல இருக்காங்க. அண்ணா வருவான்னு சொன்னாங்களே... இப்போ இங்க யாரு வந்து என்ன முடியும். வீட்டு வேலை செய்தாவது சோறு போடுவேன்னு சொன்னானே... இப்போ இப்படி ஆகிருச்சே" எனக் கதறி அழுதனர்.

TVK Vijay Karur Stampede Complete Details | கரூரில் என்ன நடந்தது? | முழுமையான தகவல்கள்

கரூரில் நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருக்கின்றனர். களத்தில் என்ன நடந்தது? இவ்வளவு பெரிய இ... மேலும் பார்க்க

கரூர் : 'தப்பு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ...'- விஜய்யை விமர்சித்த சத்யராஜ்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்திற்கு நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்து விஜய்யை விமர்சித்தும் இருக்கிறா... மேலும் பார்க்க

கரூர்: 'அழுகையை அடக்க முடியல; விஜய் விட்டுபுட்டு ஓடுனது பெரிய தப்பு'- பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கம்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரசாரத்தில் கிட்டதட்ட 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.மூச்சுத் திணறல் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்ட பலர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகி... மேலும் பார்க்க

கரூர்: `குழந்தைகளைத் தோள்ல வச்சுட்டு வந்தவங்க அப்படியே விழுந்தாங்க!'- சம்பவம் இடத்திலிருந்த ராஜேஷ்

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த நிலையில், தவெக பரப்புரைக் கூட்... மேலும் பார்க்க

கரூர்: உயிரிழப்பு, மருந்துவர்கள், பணியிலிருப்பவர்கள் - உதயநிதி சொல்லும் புள்ளிவிவரம்

கரூரில் ஏற்பட்டுள்ள துயர சம்பவத்தை அடுத்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கரூர் வந்தார்.அங்கு உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்களிடம் ஆறுதல் தெரிவித்தார்.... மேலும் பார்க்க