கரூர் துயர சம்பவம்: 'அடுத்த வார விஜய் பரப்புரைகள் தற்காலிக ரத்து' - தவெக
கரூர் : 'தப்பு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ...'- விஜய்யை விமர்சித்த சத்யராஜ்
கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தத் துயர சம்பவத்திற்கு நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்து விஜய்யை விமர்சித்தும் இருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், " உயிரிழந்த குடும்பத்திற்கு என்னுடைய ஆழந்த இரங்கல்கள். தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது.
தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தி ஆகணும். சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து...
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தப்பு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ... தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ... " என விஜய்யை விமர்சித்தும் பேசியிருக்கிறார்.