கரூர் கூட்ட நெரிசல்: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் மத்திய அரசு நிவாரணம்!
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 39 பேர் பலியான நிலையில், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கரூரில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000மும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் @narendramodi அறிவித்துள்ளார். https://t.co/0soo3NL0B9
— PMO India (@PMOIndia) September 28, 2025

இந்தச் சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சமும், தவெக தலைவர் விஜய் ரூ.20 லட்சமும் அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க:கரூர் பலி: நீதிமன்றம் விசாரிக்க தவெக கோரிக்கை?