செய்திகள் :

கரூர் பலிக்கு 5 காரணங்கள்? பிரேமலதா விளக்கம்

post image

கரூர் பலிக்கு தவெக பக்கமும் தவறு இருக்கிறது, தமிழக அரசு பக்கமும் கவனக் குறைவு இருக்கிறது என்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு முழுக்க அரசியல் பொதுக்கூட்டங்கள், மாநாடு நடைபெறுகிறது. ஆனால் இதுவரைக்கும் தமிழக அரசியல் வரலாற்றில் அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இப்படி ஒரு உயிர்சேதம் எங்கும் நடைபெறவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது. பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பங்களையும் நேரில் சந்தித்தேன்.

அனைவரும் கூறுவது அங்கு குறுகலான பாதை, உரிய பாதுகாப்பு யாருக்கும் தரப்படவில்லை. விஜய் வாகனம் கூட்டத்தை நெருங்கி வரவர கூட்ட நெரிசல் அதிகமாகி உள்ளது. அந்த இடத்தில் போலீஸ் லேசான தடியடி நடத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நிறைபேர் கீழே விழுந்ததால் உயிர்பலி ஏற்பட்டிருக்கிறது. ஆம்புலன்ஸ்கள் வரிசையாக வருகின்றன. விஜயே சொல்கிறார், 'என்ன, நம் கட்சி கொடியோட ஆம்புலன்ஸ் வருகிறதே' என்று.

அந்த ஆம்புலன்ஸ்கள் யாருடையது? இதுக்கெல்லாம் அரசு மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். இதற்கு யார் பொறுப்பேற்பது?. குறுகலான பாதையில் அரசு அனுமதி தரலாமா. பெரிய மைதானத்தைதான் கொடுத்திருக்க வேண்டும். சிகிச்சை பெறுபவர்களிடம் கேட்டதற்கு, காலதாமதம், குறுகலான பாதை, கரூர் பவர் கட், போலீஸ் தடியடி, தவெக கொடியுடன் ஆம்புலன்ஸ் ஆகிய காரணங்களால்தான் உயிர் பலி ஏற்பட்டிருக்கிறது. தவெகவும் இதை உணர வேண்டும்.

கரூர் பலி: காங்கிரஸ் ரூ. 1 கோடி நிவாரணம் அறிவிப்பு!

விஜய்க்கு எந்தவாறு பாதுகாப்பு இருக்கோ அதைபோல் தொண்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். போலீஸ் ஆளுங்கட்சிக்கு மட்டுதான் நிற்பார்கள். எதிர்க்கட்சிக்கு ஆதரவு தரமாட்டார்கள். நடந்த பிறகுதான் போலீஸ் வருகிறார்கள். அதுவரை போலீஸார் என்ன செய்தார்கள். அதன்பிறகு அமைச்சர்கள் எல்லாம் வருகிறார்கள். விஜய் பேசுகிற 10 நிமிடத்துக்கு முன்கூட்டியே பாதுகாப்பு கொடுத்திருக்கலாம்.

முன்கூட்டியே எந்த ஏற்பாடும் செய்யவில்லை. எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இதுபோன்று தமிழகத்தில் நடக்கக்கூடாது. தவெக பக்கமும் தவறு இருக்கு, தமிழக அரசு பக்கமும் கவனக் குறைவு இருக்கு. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

கரூர் பலி: ஒரு நபர் ஆணையத்தில் நம்பிக்கையில்லை - அண்ணாமலை

ஒரு நபர் ஆணையத்தில் நம்பிக்கையில்லை என மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் ஆட்சியர் மீதும், காவல் துறை கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும... மேலும் பார்க்க

கரூர் பலி: மின்மாற்றி மீது தொண்டர்கள் ஏறியபோது மட்டுமே மின்தடை - மின்வாரியம்

கரூரில் விஜய் பிரசாரத்தின்போது தொண்டர்கள் மின்மாற்றியின் மீது ஏறியபோது மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கரூர் மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின... மேலும் பார்க்க

கரூர் பலி: அருணா ஜெகதீசன் விசாரணை தொடங்கியது!

கரூர் துயரச்சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் ஒருநபர் விசாரணை தொடங்கியது. அப்பகுதி மக்களிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் என்ன நடந்ததென அவர் விசாரணை மேற்கொள்கிறார். தூத்... மேலும் பார்க்க

விஜய் பிரசாரத்தில் 2 வயது குழந்தை பலி: “குழந்தையை அழைத்துச் சென்றது எங்கள் தவறு!” -பெற்றோர்

கரூரிக் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 2 வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கரூரின் வேலுசாமிபுரத்தில் விஜய்யின் அரசியல் பிரசாரம் நடைபெற்ற இடத்தில் திரண்டிருந்த கட... மேலும் பார்க்க

முதலுதவி செய்யாமல் சென்றது கண்டிக்கத்தக்கது: பெ. சண்முகம்

விஜய் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே நெரிசலில் பலி ஏற்பட்ட நிலையில் அவரோ, அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த முதலுதவியும் செய்யாதது கண்டிக்கத்தக்கது என மார்க்சிஸ்ட் கம்யூனி... மேலும் பார்க்க

கரூர் பலி: வேதனை அளிக்கிறது - தில்லி முதல்வர்

கரூரில் நேர்ந்த துயரமான சம்பவம் வேதனை அளிப்பதாக தில்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொ... மேலும் பார்க்க