செய்திகள் :

கரூர் பலி 40ஆக உயர்வு

post image

கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவியில் அனுமதிக்கப்பட்டிருந்த கவின்(39) என்பவர் சிகிச்சைப் பலனின்றி பலியானார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் நேற்று பலியாகினர்.

மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிசைப் பெற்று வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான நிலையில் அவர்களில் 34 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள ஐந்து பேரின் அடையாளம் காணப்படாமல் உள்ளது.

கரூர் பலி: நாளை நீதிமன்ற விசாரணை

இந்நிகழ்வு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சீமான் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த துயரகரமான சம்பவத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

The death toll in the Karur TVK stampede has risen to 40.

கரூர் பலி: சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்- ஓ. பன்னீர்செல்வம்

கரூர் தவெக கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்த பின் அவர் செய்தியாளர... மேலும் பார்க்க

கரூர் பலிக்கு 5 காரணங்கள்? பிரேமலதா விளக்கம்

கரூர் பலிக்கு தவெக பக்கமும் தவறு இருக்கிறது, தமிழக அரசு பக்கமும் கவனக் குறைவு இருக்கிறது என்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தி... மேலும் பார்க்க

கரூர் பலி: காங்கிரஸ் ரூ. 1 கோடி நிவாரணம் அறிவிப்பு!

கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் பகிர்ந்தளிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.கரூ... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் பலி: நாளை நீதிமன்ற விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் பலி தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை விசாரணை நடத்தப்படவுள்ளது.கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 39 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற நீதிபதி த... மேலும் பார்க்க

கரூர் மாவட்டத்தில் 15,000க்கும் அதிகமான கடைகள் அடைப்பு

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கரூர் மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட... மேலும் பார்க்க

கரூர் விஜய் பிரசாரத்தில் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த 2 பேர் பலி!

வெள்ளக்கோவில்: கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி வெள்ளக்கோவிலைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மூன்றாவது கட்டமா... மேலும் பார்க்க