செய்திகள் :

கரூர் பலி: சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்- ஓ. பன்னீர்செல்வம்

post image

கரூர் தவெக கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நேற்றைய தினம் நடந்த துயரச் சம்பவம் அனைத்து தமிழக மக்களின் நெஞ்சை உலுக்குகின்ற சம்பவமாக நடந்திருக்கிறது. இந்த துயரச் சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

நடந்த சம்பவத்தை தீவிர விரிவான சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுவே தமிழக மக்களின் கோரிக்கை இருக்கிறது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு போதிய நிவாரணமும், அரசுப் பதவியும் வழங்க வேண்டும். தமிழக அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

குழந்தையைப் பெற்றெடுக்க இயலாதென்ற நடிகையின் திருமண புகைப்படங்கள்!

இன்னும் அந்தந்தக் குடும்பங்களுடைய சூழ்நிலைகளைப் பொறுத்து, அதிகமாக நிதி கொடுக்க வேண்டும். இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை உயிரிழப்பு அதிகமாக உள்ளது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பை முறைபடுத்த வேண்டும். தமிழக அரசும் கவனமுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் நேற்று பலியாகினர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிசைப் பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் இன்று பலியான நிலையில் பலி எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.

EX CM O. Panneerselvam has urged a CBI inquiry into the Karur TVK stampede.

கரூர் பலி: மின்மாற்றி மீது தொண்டர்கள் ஏறியபோது மட்டுமே மின்தடை - மின்வாரியம்

கரூரில் விஜய் பிரசாரத்தின்போது தொண்டர்கள் மின்மாற்றியின் மீது ஏறியபோது மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கரூர் மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின... மேலும் பார்க்க

கரூர் பலி: அருணா ஜெகதீசன் விசாரணை தொடங்கியது!

கரூர் துயரச்சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் ஒருநபர் விசாரணை தொடங்கியது. அப்பகுதி மக்களிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் என்ன நடந்ததென அவர் விசாரணை மேற்கொள்கிறார். தூத்... மேலும் பார்க்க

விஜய் பிரசாரத்தில் 2 வயது குழந்தை பலி: “குழந்தையை அழைத்துச் சென்றது எங்கள் தவறு!” -பெற்றோர்

கரூரிக் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 2 வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கரூரின் வேலுசாமிபுரத்தில் விஜய்யின் அரசியல் பிரசாரம் நடைபெற்ற இடத்தில் திரண்டிருந்த கட... மேலும் பார்க்க

முதலுதவி செய்யாமல் சென்றது கண்டிக்கத்தக்கது: பெ. சண்முகம்

விஜய் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே நெரிசலில் பலி ஏற்பட்ட நிலையில் அவரோ, அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த முதலுதவியும் செய்யாதது கண்டிக்கத்தக்கது என மார்க்சிஸ்ட் கம்யூனி... மேலும் பார்க்க

கரூர் பலி: வேதனை அளிக்கிறது - தில்லி முதல்வர்

கரூரில் நேர்ந்த துயரமான சம்பவம் வேதனை அளிப்பதாக தில்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொ... மேலும் பார்க்க

விஜய் பிரசாரத்திற்கு 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம்

விஜய் பிரசாரத்துக்கு மொத்தம் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கமளித்துள்ளார். இதுறித்து கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவ... மேலும் பார்க்க