கரூர் கூட்ட நெரிசல் பலி: நாளை நீதிமன்ற விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் பலி தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை விசாரணை நடத்தப்படவுள்ளது.
கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 39 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபானியிடம் தவெக நிர்வாகிகள் முறையீடு செய்தனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் தவெக இணைச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார் தெரிவித்ததாவது,
``கரூர் பலி சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்டுள்ளோம். நாளை மதியம் 2.15 மணியளவில், உயர்நீதிமன்ற அமர்வில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார். நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், தற்போதைக்கு மேற்படி எதுவும் பேச வேண்டாம்.
நாளைய விசாரணைக்குப் பிறகு தவெக தரப்பு கருத்தைத் தெரிவிப்போம்’’ என்று கூறினார்.
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடவும் தவெகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க:கரூர் பலி: உடல்களைக் காண முற்பட்ட சீமானை உறவினர்கள் முற்றுகை