கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை பணியிடை நீக்க செய்க! -அண்ணாமலை
ஐபோனுக்கு போட்டியாக ஒன்பிளஸ் 15..! விலை, வெளியீடு, சிறப்பம்சங்கள் என்ன?
கேமிராவுக்கு என புகழ்ப்பெற்ற ஒன்பிளஸ் நிறுவனத்தின் 'ஒன்பிளஸ் 15’ என்ற புதிய ஸ்மார்ட்போன் ஐபோனுக்கு போட்டியாக அறிமுகமாகவிருக்கிறது.
இந்தப் புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் சமூக வலைதளத்தில் பேசுபொருளை உருவாக்கியுள்ளது.
சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்பிளஸ் நிறுவனம், இந்திய பிரீமியம் பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை வழங்கி வருகிறது.
அந்தவகையில், புதிதாக ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வருகை, பயனர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்பிளஸ் 15 சிறப்பம்சங்கள்
திரை: 6.78 அங்குலம் கொண்ட எல்டிபிஓ திரை
ரிப்ரஸ் ரேட்: 165ஹெர்ட்ஜ் கொண்ட புதுப்பிக்கும் வீதம்
புராசஸர்: ஸ்நாப்டிராகன் 8 எலைட் ஜென் 5
காமிரா: 50மெகா பிக்சல் - முதன்மை காமிரா, 50 மெகா பிக்சல் அல்ட்ரா வைட், 50 மெகா பிக்சல் உடன் 3 ஜூம் பெரிஸ்கோப்.
பேட்டரி: 7300 மில்லி ஆம்பியர் கொண்ட பேட்டரி
சார்ஜர்: 120 வாட்ஸ் வயர் சார்ஜர், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜர்.
மழை, தூசி புகா திறன்: ஐபி 68 மற்றும் ஐபி 69 வசதிகள்.
வெளியாவது எப்போது?
இந்த ஸ்மார்ட்போன் வரும் அக்டோபரில் சீனாவில் வெளியாக இருக்கிறது.
இந்தியாவில் இந்த வகை ஸ்மார்ட்போன் வரும் ஜனவரியில் வெளியாகலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் வெளியான பிறகுதான் இதன் முழுமையான சிறப்பம்சங்களும் வெளியாகுமெனக் கூறப்படுகிறது.
விலை எவ்வளவு?
இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 70ஆயிரம் வரை இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதே விலையில் இருக்கும் ஆப்பிள் 15 ஸ்மார்ட்போனைவிட நல்ல சிறப்பம்சங்களுடன் இருப்பதால், இந்த ஒன்பிளஸ் 15 அதிகமாக விற்பனையாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.