அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்து: கிரிசில்
கொல்கத்தா: இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள அதித வரி நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று கிரெடிட் ரேட்டிங் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் (கிரிசில்) தனது செப்டம்பர் மாத அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வரி விதிப்பால் இந்தியப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் முதலீடுகள் பாதிக்கும். இருப்பினும், பணவீக்கம் மற்றும் விகிதக் குறைப்புகளால் உள்நாட்டு நுகர்வு வளர்ச்சியை இது ஆதரிக்கும்.
2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஐந்து காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.8 சதவிகிதமாக உயர்ந்தது. இதுவே அதன் முந்தைய ஆண்டு இதே காலாண்டில் அது 7.4 சதவிகிதமாக இருந்தது.
இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, அதே காலகட்டத்தில் 10.8 சதவிகிதத்திலிருந்து 8.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக தெரிவித்தது. அதே வேளையில் நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கம் முந்தைய ஆண்டில் 4.6 சதவிகிதத்திலிருந்து நடப்பு நிதியாண்டில் 3.5 சதவிகிதமாகக் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தது.
இதையும் படிக்க: ஈவுத்தொகையாக ரூ.3,248 கோடி அரசுக்கு செலுத்திய என்டிபிசி!