விஜய் பிரசாரத்தில் உயிரிழப்பு 12-ஆக உயர்வு? குழந்தைகள், பெண்கள் பலி?
கரூர்: கரூரில் விஜய் பிரசாரத்தில் கலந்துகொண்ட திரளான மக்கள் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து பலியானதாகக் களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
அவர்களுள் குழந்தைகளும் அடங்குவர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கு சென்றவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இந்தத் தகவலைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியரும் செந்தில் பாலாஜியும் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அங்கு மயக்கமடைந்த நபர்களுக்கு தேவையான சிகிச்சையளிக்க அவர்கள் அறிவுறுத்தி ஆய்வு செய்து வருகின்றனர்.