செய்திகள் :

கரூர் நெரிசல் பலி: நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம்!

post image

கரூர் நெரிசல் பலி சம்பவத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட 36 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த 20 க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்த கோரச் சம்பவத்தில் பலி எண்ணிக்கை மேலும் அஞ்சப்படுகிறது. பலியோனரின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று (செப். 27) கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறிந்து சொல்லொண்ணாத் துயரமும் வேதனையும் அடைந்தேன்.

விலைமதிக்க முடியாத அந்த உயிரிழப்புகள் நம் அனைவரின் நெஞ்சத்தையும் உலுக்கியுள்ளது. ஈடு செய்ய முடியாத பேரிழப்பை எதிர்கொண்டுள்ள அந்தக் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

மருத்துவ சிகிச்சைக்கான சிறப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்த மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோரை அனுப்பி வைத்துள்ளேன்.

மேலும், திருச்சி, சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மருத்துவக் குழுக்களுடன் கரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த துயரகரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும். மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும்.

நான் இன்றிரவே கரூர் சென்று மேற்படி துயர சம்பவத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் தெரிவிக்கவும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும் உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Karur stampede deaths: Commission of inquiry headed by Justice Aruna Jagatheesan!

இதையும் படிக்க... கரூரில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம்! தமிழக அரசு

கரூர் பலி: அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு!

கரூரில் விஜய்யின் அரசியல் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசின் அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி, 04324 256306 7010806322 ஆ... மேலும் பார்க்க

கண்ணீர் விட்டழுத அன்பில் மகேஸ்!

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி பலியானோரின் சடலங்களைக் கண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்ணீர் விட்டழுதார்.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது! - பவன் கல்யாண்!

கரூர் நெரிசல் பலி சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார்.கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 6 கு... மேலும் பார்க்க

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்: விஜய்

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.விஜய் வெளியிட்ட பதிவு:”இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனை... மேலும் பார்க்க

கரூர் பலி: தமிழக அரசிடம் விளக்கம் கோரியது மத்திய அரசு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியானது தொடர்பாக தமிழக அரசுக்கு விளக்கம் கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட... மேலும் பார்க்க

இன்றிரவே கரூர் விரைகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்றிரவே கரூர் விரைகிறார். விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியான நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் ... மேலும் பார்க்க