கரூர் பலி: அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு!
கரூரில் விஜய்யின் அரசியல் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசின் அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி,
04324 256306
7010806322
ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விஜய்யின் அரசியல் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 36 பேர் பலியாகினர். கரூரில் மாவட்ட அரசு மருத்துவமனையில் கள நிலவரத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுடன் பேசிய செந்தில் பாலாஜி, 58 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.