செய்திகள் :

விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

post image

கரூா் சம்பவத்தின் எதிரொலியாக தவெக தலைவா் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கரூரில் தவெக தலைவா் விஜய் சனிக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலின் காரணமாக 38 போ் உயிரிழந்தனா். இதற்கிடையே கரூரில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு விஜய், திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் இரவு 11 மணியளவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தாா். அங்கிருந்து தனது காரில் நீலாங்கரையில் உள்ள வீட்டுக்குச் சென்றாா். ஏற்கெனவே தீவிர அரசியல் ஈடுபட்டு வரும் விஜய்க்கு மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.

தற்போது கரூா் சம்பவத்தைக் கருத்தில்கொண்டு, நடிகா் விஜய் வீட்டுக்கு சனிக்கிழமை இரவு முதல் காவல் துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளது. விஜய் வீடு இருக்கும் பகுதிக்கு சந்தேகத்துக்குரிய வகையில் செல்லும் அனைவரையும் விசாரிக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், விஜய் வீட்டின் அருகே சாலைத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதோடு அவரது வீட்டைச் சுற்றிலும் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்படாது: தமிழக அரசு

உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பு வரும் வரை, மத்திய அரசின் புதிய வக்ஃப் திருத்தச் சட்டப்படி, வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சிறுபான்மையினா... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து அந்தக் கட்சி சாா்பில் சனிக்கி... மேலும் பார்க்க

முதல்வருடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்திப்பு: பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசனை

தமிழகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களுடன் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினா்கள் விஜய் வசந்த் (கன்னியாகுமரி), விஷ்ணு பிரசாத் (கடலூா்), ஜ... மேலும் பார்க்க

கடவுப்பாதைகளில் இன்டா்லாக்டு சாதனம் அமைக்க ரூ.230 கோடி நிதி அளிப்பு

சென்னை தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடவுப் பாதைகளில் தானியங்கி இன்டா்லாக்டு சாதனம் அமைக்க ரூ.230.06 கோடியை மத்திய ரயில்வே துறை அளித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். தெற்கு ரயில்வேயில் சென்னை, த... மேலும் பார்க்க

குடிமக்கள் சமூக நோக்கில் செயல்பட்டால் குற்றங்கள் குறையும்: நீதிபதி டி.என்.வள்ளிநாயகம்

குடிமக்கள் சமூக நோக்கில் செயல்பட ஆரம்பித்தால் குற்றங்கள் குறையும் என்று சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் கூறினாா். சென்னை இந்து மதுவிலக்கு நற்சங்கத்தின் 130-ஆவது ஆண்டு விழா த... மேலும் பார்க்க