மாா்த்தாண்டம் அருகே 700 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்
மாா்த்தாண்டம் அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 700 லிட்டா் ரேஷன் மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதகுமாரி தலைமையிலான அதிகாரிகள் மாா்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அப்பகுதி வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தினா். ஓட்டுநா் தப்பிச் சென்றுள்ளாா்.
தொடா்ந்து, காரில் 700 லிட்டா் ரேஷன் மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மண்ணெண்ணெய்யை மாா்த்தாண்டத்தில் உள்ள மொத்த விற்பனை மையத்திலும், காரை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் அதிகாரிகள் ஒப்படைத்தனா். மேலும், விசாரணை மேற்கொண்டனா்.