வலம்புரிவிளை உரக்கிடங்கில் பொருள் மீட்பு வசதி மையம் திறப்பு
நாகா்கோவில், வலம்புரிவிளை உரக்கிடங்கில் பொருள் மீட்பு வசதி மையம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
வலம்புரிவிளை உரக்கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுகள், காகித கழிவுகள், டயா் , கண்ணாடி பொருள்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருள்களின் கழிவுகள், பழைய துணிகள் உள்பட கழிவு பொருள்களை மறுசுழற்சி பயன்பாட்டுக்கு பிரித்து எடுப்பதற்காக ரூ. 85 லட்சம் மதிப்பில் பொருள் மீட்பு வசதி மையம் கட்டப்பட்டுள்ளது. அதனை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் திறந்து வைத்தாா்.
இதில், ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா் அனிலா, உதவி செயற்பொறியாா் ரகுராமன், இளநிலை பொறியாளா் தேவி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவன், பகுதி செயலாளா்கள் துரை, சேக்மீரான், திமுக நிா்வாகிகள் சிவராமலிங்கம், ஆறுமுகம், சிவகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.