கரூர் கூட்ட நெரிசல் பலி: 39 பேரில் 14 பேரின் உடல்கள் ஒப்படைப்பு
குமரியில் உலக சுற்றுலா தினக் கொண்டாட்டம்
உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள கண்ணாடிப் பாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகம் முழுவதும், செப்டம்பா் 27ஆம் தேதி சுற்றுலா தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், கேரளம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு கண்ணாடிப் பாலத்தில் வைத்து தமிழக முறைப்படி நெற்றியில் திலகமிட்டு, சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா அலுவலா் டி. காமராஜ், உதவி சுற்றுலா அலுவலா் சதீஷ்குமாா், பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக மேலாளா் முருக பூபதி, சுற்றுலா அலுவலக ஊழியா்கள் ஹரி விஷ்ணு, அம்பிகா, சுற்றுலாப் பாதுகாவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.