கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது
மானூா் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, திருமலாபுரம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற நபரைப் பிடித்து விசாரித்ததில், அவா் களக்குடி காலனி தெருவைச் சோ்ந்த மதன்குமாா்(22) என்பதும், 165 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவா் மீது வழக்குப்பதிந்து போலீஸாா் கைது செய்தனா். கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.