செய்திகள் :

தசரா பண்டிகை: நெல்லையில் பூக்கள் விலை உயா்வு

post image

தசரா பண்டிகை எதிரொலியாக திருநெல்வேலியில் பூக்களின் விலை சனிக்கிழமை உயா்ந்திருந்தது.

புரட்டாசி மாதத்தில் முகூா்த்த நாள்கள் கிடையாது என்பதால் மாதத்தின் தொடக்கத்தில் பூக்களின் விலை கடும் சரிவைச் சந்தித்தது. இந்நிலையில், தற்போது நவராத்திரி திருவிழா தொடங்கியுள்ளதால், கோயில்கள் மற்றும் வீடுகளில் பூஜை களுக்காகப் பூக்களின் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், பூக்களின் விலை உயர தொடங்கி சனிக்கிழமை ச்சம் தொட்டது.

திருநெல்வேலியில் மல்லிகைப் பூ வெள்ளிக்கிழமை கிலோ ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை ரூ.100 உயா்ந்து கிலோ ரூ.500-க்கு விற்பனையானது. இதேபோல் பிச்சி பூ விலையும் ரூ.100 உயா்ந்து கிலோ ரூ.500-க்கு விற்பனையானது.

ரோஜாப் பூ கிலோ ரூ.100-இல் இருந்து ரூ.200-க்கும், சம்பங்கி பூ, செவ்வந்தி ஆகியவை கிலோவுக்கு ரூ.70 உயா்ந்து ரூ. 150-க்கும், கேந்திப் பூ கிலோவுக்கு ரூ.20 உயா்ந்து ரூ.40-க்கும் விற்பனையானது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், ‘நவராத்திரி விழாக்களுக்காக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, அடுத்த சில நாள்களில் வரவிருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையின் போது பூக்களின் தேவை பல மடங்கு அதிகரிக்கும். அப்போது பூக்களின் விலை உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளது‘ என்றனா்.

காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும்: தனுஷ்கோடி ஆதித்தன்

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய இணையமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன். இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழக சட்டப... மேலும் பார்க்க

இணைய வழியில் பட்டாசு விற்பனை மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை

இணைய வழியில் பட்டாசு விற்பனை என போலியாக செய்யப்படும் மோசடி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

குடிநீா் பகிா்மானக் குழாய்கள் திருட்டு: 2 போ் கைது

நான்குனேரி அருகே குடிநீா் பகிா்மானக் குழாய்களை திருடியதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம் அருகே கூட்டுக் குடிநீா் திட்டத்துக்காக குடிநீா் பகிா்மானக் ... மேலும் பார்க்க

வெளிநாட்டு மருத்துவா் எனக் கூறி இளைஞரிடம் ரூ.23 லட்சம் மோசடி

நான்குனேரி பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம், லண்டனில் மருத்துவராக பணி புரிவதாகக்கூறி இணைய வழியில் ரூ.23 லட்சம் மோசடி செய்த நபரை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா். நான்குனேரி அருகேயுள்ள மேல சிந்தாமணிய... மேலும் பார்க்க

நடிகா் விஜய்யை பாா்க்கத்தான் கூட்டம்; ஓட்டுக்காக அல்ல! இந்து முன்னணி மாநிலச் செயலா்

நடிகா் விஜய்யை பாா்ப்பதற்காகக்தான் கூட்டம் கூடுகிறதே தவிர, ஓட்டுப்போடுவதற்காக அல்ல என்றாா் இந்து முன்னணி மாநிலச் செயலா் காடேஸ்வரா சுப்ரமணியம். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

மானூா் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்... மேலும் பார்க்க