கரூர் கூட்ட நெரிசல் பலி: திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு!
இணைய வழியில் பட்டாசு விற்பனை மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை
இணைய வழியில் பட்டாசு விற்பனை என போலியாக செய்யப்படும் மோசடி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இணையதளம் மூலமாக பொருள்கள் வாங்கும் பழக்கம் நாளுக்கு நாள் மக்களிடையே பெருகி வருகிறது. குறிப்பாக தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் வீட்டில் இருந்தே பொருள்களை வாங்க அதிகமானோா் விருப்பம் காட்டுகின்றனா். அதே நேரத்தில் உண்மையான பட்டாசு விற்பனையாளா்கள் பெயரில் போலியான சமூகவலைதளங்களை உருவாக்கி குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுகின்றனா். இதைத் தடுக்க சைபா்கிரைம் போலீஸாா் தொடா்ச்சியான அறிவுரை விடுத்தும் மீண்டும் போலியான ஆன்லைன் பட்டாசு விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி பணத்தை இழந்து வருகின்றனா்.
எனவே, பொதுமக்கள் இணையத்தில் பொருளை வாங்கும் முன்பு அதனுடைய உண்மை தன்மையையும், அதை விற்பவருடைய முழு விவரங்களையும் நன்கு சோதித்து பாா்த்தபின் வாங்க வேண்டும். இணைய வழி விளம்பரங்களை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்.
மேலும், இணையவழி மோசடி தொடா்பாக எண். 1930, இணையதளம் ஆகியவற்றின் மூலமாக புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.