செய்திகள் :

கரூர்: ``அடுத்த மாசம் கல்யாணம்; இப்போ பொண்ணு, மாப்பிள்ளை ரெண்டு பேருமே இல்லை'' - கதறும் குடும்பம்

post image

அடுத்த மாதம் திருமணமாக இருந்த கரூரைச் சேர்ந்த கோகுலஶ்ரீயும், மதுரையைச் சேர்ந்த ஆகாஷும் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று நடந்த தவெக தலைவர் விஜய் பரப்புரையைக் காணச் சென்றுள்ளனர். அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இரண்டு பேருமே உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து கோகுலஶ்ரீயின் தாய் கண்ணீருடன் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டதாவது,

"சாவதற்காகத்தான் இப்படிப் போனார்களா? கட்சி கட்சினு ஏன் எல்லாரையும் உயிரை விட வெக்கறீங்க?

கட்சி கட்சினு எத்தனை பேரோட குடும்பம் வீதியில நிக்குது?

அடுத்த மாதம் கல்யாணம். ரெண்டு பேருக்குமே 24 வயசு தான் ஆகுது.

கதறும் தாய் | கரூர்
கதறும் தாய் | கரூர்

ரெண்டு பேரும் ரெண்டு மணி வரைக்கு பேசிட்டு தான் போனாங்க. கரூர்ங்கறனால போனாங்க.

மாடில தான் நிக்கறேனு சொன்னாங்க. நானும் கூட தான் இருந்தேன். இறங்கி வரையில தான் என் புள்ளைய கொன்னுட்டாங்க.

ஆறரை மணிக்கு போன்ல பேசுனோம். கும்பலா இருக்கு வந்துருங்கனு சொன்னோம். செல்பி எடுத்துட்டு வந்துடறேனு சொன்னாங்க.

செய்திய பாத்துட்டு தான் நாங்க வந்தோம். என் பையன் தப்பிச்சுகிட்டோம். புள்ளையும், மாப்பிள்ளையும் போயிட்டாங்க. என் புள்ளைய ஆசை ஆசையா வளர்த்தேன்" என்றார்.

கரூர் : 'தப்பு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ...'- விஜய்யை விமர்சித்த சத்யராஜ்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்திற்கு நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்து விஜய்யை விமர்சித்தும் இருக்கிறா... மேலும் பார்க்க

கரூர்: 'அழுகையை அடக்க முடியல; விஜய் விட்டுபுட்டு ஓடுனது பெரிய தப்பு'- பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கம்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரசாரத்தில் கிட்டதட்ட 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.மூச்சுத் திணறல் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்ட பலர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகி... மேலும் பார்க்க

கரூர்: `குழந்தைகளைத் தோள்ல வச்சுட்டு வந்தவங்க அப்படியே விழுந்தாங்க!'- சம்பவம் இடத்திலிருந்த ராஜேஷ்

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த நிலையில், தவெக பரப்புரைக் கூட்... மேலும் பார்க்க

கரூர்: உயிரிழப்பு, மருந்துவர்கள், பணியிலிருப்பவர்கள் - உதயநிதி சொல்லும் புள்ளிவிவரம்

கரூரில் ஏற்பட்டுள்ள துயர சம்பவத்தை அடுத்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கரூர் வந்தார்.அங்கு உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்களிடம் ஆறுதல் தெரிவித்தார்.... மேலும் பார்க்க

TVK: ``துயரத்தில் உறைந்திருக்கும், இவர்தான் காரணம், அவர் தான் காரணம் என்பது... " - திருமாவளவன்

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அரசிய... மேலும் பார்க்க

`விஜய்யைப் பார்த்துட்டு வரேன்னு சொன்னா இப்படி வருவானு நினைச்சுக்கூட பார்க்கல' - கதறும் உறவினர்கள்

கரூரில் விஜய் கலந்துகொண்ட தவெக கட்சிக் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பரிதாபமாக உயிரிழந்துள்ளது நாடு முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த இளம்பெ... மேலும் பார்க்க