கரூர் பலி: இழப்பீடாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் - திருமாவளவன்
கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு தொல். திருமாவளவன் அளித்த பேட்டி:
தவெக பிரசாரக் கூட்டத்தில் 39 பேர் பலியான சம்பவம் வேதனை அளிக்கிறது. யார் பொறுப்பு என்பதைவிட, தற்போது ஆபத்தான நிலையில் உள்ளவர்களைக் காப்பதே முக்கியம்.
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சமும் அரசு வழங்க வேண்டும்.
சம்பவ இடத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சென்று பார்வையிட்டது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலை அளித்திருக்கும் என்று தெரிவித்தார்.
கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: கரூரில் முதல்வர் ஸ்டாலின்! பலியானோருக்கு அஞ்சலி