கரூர் கூட்ட நெரிசல்: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் மத்திய அரசு நிவாரணம...
கரூர்: 'தாங்க முடியாத துயரம் இது'- நடிகர் கார்த்தி இரங்கல்
கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தத் துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " கரூரிலிருந்து வந்த செய்தி தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
காயமடைந்தோர் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இனி ஒருபோதும் இவ்வாறு நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்போம்" என்று பதிவிட்டிருக்கிறார்.