கரூர் துயர சம்பவம்: 'அடுத்த வார விஜய் பரப்புரைகள் தற்காலிக ரத்து' - தவெக
கரூர் நெரிசல் பலி: உடல்களைக் காண முற்பட்ட சீமானை உறவினர்கள் முற்றுகை
கரூர் நெரிசலில் சிக்கி பலியானோரின் உடல்களைக் காண முற்பட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை, அப்பகுதியினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கரூரில் தவெக பிராசாரக் கூட்டத்தில் சிக்கி பலியானோரின் உடலைக் காண, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான் சென்றார்.

ஆனால், பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களைக் காண முற்பட்ட சீமானை, பலியானோரின் உறவினர்கள் முற்றுகையிட்டு, தங்களை பிணவறையினுள் செல்லக் கூடாது என்றும், உடல்களை விரைவில் ஒப்படைக்க மறுக்கிறார்கள் என்றும் சீமானிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க:கரூர் நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களுடன் இன்று விஜய் சந்திப்பு?