செய்திகள் :

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதியை சந்தித்த நிர்மல் குமார்; தவெக வைத்த கோரிக்கை என்ன? நாளை விசாரணை

post image

கரூர் துயர சம்பவம் குறித்து நாளை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணை நடக்க உள்ளது.

இந்தச் சம்பவத்தில் சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும் என்று தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதை வலியுறுத்தி தவெக - வின் நிர்மல் குமார் சென்னையில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணியைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பிற்கு பிறகு, நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது...

"நாளை மதியம் 2.15 மணிக்கு இந்த வழக்கை மதுரை அமர்வில் விசாரணைக்கு எடுத்துகொள்வதாகக் கூறியிருக்கிறார்கள். இப்போதைக்கு நாங்கள் வேறு எதுவும் சொல்லவில்லை.

கரூர்: விஜய் பரப்புரை
கரூர்: விஜய் பரப்புரை

நாளை மதியம் விசாரணைக்குப் பிறகு எங்களுடைய கருத்தை நாங்கள் தெரிவிப்போம்" என்று பேசியுள்ளார்.

நேற்று கரூரில் இந்தச் சம்பவம் நடந்தததை அடுத்து, நேற்று இரவே தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பிவிட்டார். தவெக பொதுசெயலாளர் ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

கேரளா: `எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைப்பது?' - பாஜக தலைவர்கள் விவாதம்; வீணா ஜார்ஜ் ஆவேசம்

திருச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை - சுரேஷ் கோபிகேரள மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது சம்பந்தமான விவாதம் தற்போது எழுந்துள்ளது. எந்த மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ... மேலும் பார்க்க

கரூர் துயர சம்பவம்: 'அடுத்த வார விஜய் பரப்புரைகள் தற்காலிக ரத்து' - தவெக

நேற்று கரூரில் பரப்புரையை மேற்கொண்டிருந்தார் தவெக தலைவர் விஜய். அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு நேரில் சென்று ஆய்வு செய்துவருகிற... மேலும் பார்க்க

கரூர்: ``படபடப்பு இருக்கும்; தம்பி விஜய் வரவில்லை என்றாலும் அவர் கட்சியினர் வருவார்கள்'' - சீமான்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருக... மேலும் பார்க்க

கரூர்: உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு; தற்போது உயிரிழந்தவர் யார்?

நேற்று கரூரில் நடந்த தவெக பரப்புரை கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் பலர் உயிரிழந்திருந்தனர்... காயமடைந்திருந்தனர். இன்று காலை வரையிலான நிலவரப்படி, இந்தச் சம்பவத்தால் 39 பேர் உயிரிழந்திரு... மேலும் பார்க்க

கரூர்: ``விஜய் களத்துக்கே இன்னும் வரவில்லை" - பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன்

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.இந்த நிலையில், காலையிலிருந்து அரசியல... மேலும் பார்க்க

கரூர்: 'அம்மாவுக்கு முத்தம் கொடுப்பா..' - உயிரிழந்த ஒன்றைரை வயது குழந்தையின் தாய் உருக்கம்

கரூரில் விஜய்யின் பரப்புரைக்காக கூடிய கூட்டத்தில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதில் ஒரு ஒன்றரை வயது குழந்தையும் அடக்கம். விஜய் பரப்புரை செய்த இடத்திலிருந்து இரண்டு தெரு தள்ளி அந்த ஒன... மேலும் பார்க்க