செய்திகள் :

கரூர்: 'அம்மாவுக்கு முத்தம் கொடுப்பா..' - உயிரிழந்த ஒன்றைரை வயது குழந்தையின் தாய் உருக்கம்

post image

கரூரில் விஜய்யின் பரப்புரைக்காக கூடிய கூட்டத்தில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இதில் ஒரு ஒன்றரை வயது குழந்தையும் அடக்கம். விஜய் பரப்புரை செய்த இடத்திலிருந்து இரண்டு தெரு தள்ளி அந்த ஒன்றரை வயது குழந்தையான துரு விக்னேஷின் வீடு இருக்கிறது.

சோகத்தில் ஆழ்ந்திருந்த துரு விக்னேஷின் வீட்டிற்குச் சென்றோம். இரண்டு 10 க்கு 10 அறைகள் கொண்ட அந்த சிறிய வீட்டில் கண்ணாடி பேழைக்குள் அந்த பிஞ்சுக் குழந்தையின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

விஜய் பிரசாரம் கரூர்
விஜய் பிரசாரம் கரூர்

துருவ்வின் அம்மா வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கண்ணாடி பேழையின் மீது சாய்ந்து படுத்தபடி கண்களில் நீர் வற்ற அழுதுகொண்டிருந்தார்.

அம்மாவுக்கு முத்தம் கொடுப்பா... என சைகை காட்டியபடி அவர் சிந்திய கண்ணீர் யாரையும் ஒரு நொடி உலுக்கிவிடும். துருவ்வின் தந்தை RO மெஷின் சர்வீஸ் செய்யும் வேலை செய்கிறார்.

வீட்டின் ஒரு மூலையில் உட்காந்து தலையில் அடித்தபடி 'உன்ன விட்டுட்டேனப்பா...' ஆற்றாமையில் பொறுமிக் கொண்டிருந்தார். மனதை கணக்கச் செய்கிற அந்தக் காட்சியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை.

துரு விக்னேஷின் தாத்தாவான வெங்கடேஷனிடம் பேசினோம். 'நான் துப்புரவுப் பணிதான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். பையன் 10 வது வரைக்கும் படிச்சிட்டு RO மெஷின் சர்வீஸ் பண்ண போயிக்கிட்டு இருக்கான்.

என் மருமவளுக்கு சரியா வாய் பேச முடியாது. ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் கழிச்சுதான் குழந்தை பிறந்துச்சு. அடுத்த மாசம் வந்தா அவனுக்கு ரெண்டு வயசு ஆகிடும்.

குழந்தை உயிரிழப்பு
குழந்தை உயிரிழப்பு

அம்மா, அப்பா, தாத்தா... எதாச்சு வேணும்னா அவா... அவான்னு பேச ஆரம்பிச்சிட்டான். விஜய் வராரேன்னு என் பொண்ணுதான் துருவ தூக்கிட்டு போயிருக்கா. அங்க கூட்டத்துல என் பொண்ணு மயக்கமாகுற நிலைமைக்கு போயிருக்கா.

அப்ப பக்கத்துல இருந்த இன்னொரு அம்மா குழந்தையை வாங்கிருக்காங்க. அவங்களும் கூட்டத்துல திணறி குழந்தையை கீழ விட்டுட்டாங்க. கூட்டத்துல நசுங்கி துரு இறந்துருக்கான்.

மவனும் மருமவளும் நிலைகுலைஞ்சு நிக்காங்க. குடும்பமே உடைஞ்சு போய் உட்காந்து இருக்கோம். விஜய் கட்சியில் இருந்து யாரும் வந்து எட்டி கூட பாக்கல.. ' என்றார் வேதனையுடன்.

கரூர்: 'சிபிஐ விசாரணை வேண்டும்'- ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "நேற்றைய தினம் நடந்த இந்த துயர சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை... மேலும் பார்க்க

கேரளா: `எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைப்பது?' - பாஜக தலைவர்கள் விவாதம்; வீணா ஜார்ஜ் ஆவேசம்

திருச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை - சுரேஷ் கோபிகேரள மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது சம்பந்தமான விவாதம் தற்போது எழுந்துள்ளது. எந்த மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ... மேலும் பார்க்க

கரூர் துயர சம்பவம்: 'அடுத்த வார விஜய் பரப்புரைகள் தற்காலிக ரத்து' - தவெக

நேற்று கரூரில் பரப்புரையை மேற்கொண்டிருந்தார் தவெக தலைவர் விஜய். அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு நேரில் சென்று ஆய்வு செய்துவருகிற... மேலும் பார்க்க

கரூர்: ``படபடப்பு இருக்கும்; தம்பி விஜய் வரவில்லை என்றாலும் அவர் கட்சியினர் வருவார்கள்'' - சீமான்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருக... மேலும் பார்க்க

கரூர்: உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு; தற்போது உயிரிழந்தவர் யார்?

நேற்று கரூரில் நடந்த தவெக பரப்புரை கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் பலர் உயிரிழந்திருந்தனர்... காயமடைந்திருந்தனர். இன்று காலை வரையிலான நிலவரப்படி, இந்தச் சம்பவத்தால் 39 பேர் உயிரிழந்திரு... மேலும் பார்க்க

கரூர்: ``விஜய் களத்துக்கே இன்னும் வரவில்லை" - பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன்

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.இந்த நிலையில், காலையிலிருந்து அரசியல... மேலும் பார்க்க