வசூல் வேட்டையில் ஓஜி!
பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது.
ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் - இயக்குநர் சுஜித் கூட்டணியில் உருவான ’தே கால் ஹிம் ஓஜி’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை பிரம்மாண்டமாக வெளியானது.
அதிரடி ஆக்சன் காட்சிகள், காட்சிகளை உருவாக்கிய விதம் என சில விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. மற்ற மொழிகளில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் தெலுங்கில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், இப்படம் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் சில நாள்களில் ரூ. 300 கோடியை நெருங்கவும் வாய்ப்புள்ளதால் நீண்ட காலம் கழித்து பவன் கல்யாணுக்கு ஒரு வெற்றிப்படம் அமைந்துள்ளது.
இதையும் படிக்க: இன்று ஸ்பெயின்... பந்தயத்துக்குத் தயாரான அஜித்!