கரூர் கூட்ட நெரிசல்: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் மத்திய அரசு நிவாரணம...
இன்று ஸ்பெயின்... பந்தயத்துக்குத் தயாரான அஜித்!
நடிகர் அஜித் குமார் ஸ்பெயினில் நடைபெறும் கார் பந்தயத்தில் இன்று கலந்துகொள்கிறார்.
குட் பேட் அக்லி திரைப்படத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித் குமார் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது அஜித் குமார் ரேஸிங் அணி சில மாதங்களுக்கு முன் துபையில் நடந்த கார் பந்தயத்தில் முதல்முறையாகக் கலந்துகொண்டு 3 ஆம் இடம் பிடித்து அசத்தியது.
தொடர்ந்து, பெல்ஜியம், நெதர்லாந்தில் நடைபெற்ற கார் பந்தயங்களில் போட்டியிட்டு கவனிக்கத்தக்க இடத்தைப் பெற்றனர்.
இந்த நிலையில், இன்று ஸ்பெயினில் நடைபெறவுள்ள 24H சீரியஸில் அஜித் குமார் தன் குழுவினருடன் கலந்துகொள்ள இருக்கிறார். இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு போட்டி துவங்குகிறது.
கடந்த சில நாள்களாக இதற்கான பயிற்சிகளை செய்துகொண்டிருந்தபோது அஜித் தன் ரசிகர்களையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஷாருக்கானை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ்!