கரூர்: ``நெரிசலில் சிக்கி உயிரிழப்பு, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது'' - ...
ஷாருக்கானை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ்!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் ஷாருக்கனை இயக்கியுள்ளார்.
ஜவான், டங்கி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் தற்போது கிங் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் படமாக இது உருவாகி வருகிறது.
இப்படப்பிடிப்புக்கு இடையே விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். பிரபல குளிர்பான நிறுவனத்திற்காக எடுக்கப்பட்ட இந்த விளம்பரத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.
தமிழில் பிரபல இயக்குநராக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ் இறுதியாக சூர்யாவை வைத்து இயக்கிய ரெட்ரோ கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்த நிலையில், தமிழ் இயக்குநர்கள் மணிரத்னம், கமல் ஹாசன், அட்லியைத் தொடர்ந்து ஷாருக்கானை, கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இதையும் படிக்க: தினேஷ் பிறந்த நாள்... வேட்டுவம் கிளிம்ஸ் வெளியீடு!