செய்திகள் :

கரூர் கூட்ட நெரிசல்: `இதுவரை 31 பேர் இறப்பு; தனியார் மருத்துவமனையில் கட்டணம் இல்லை'- செந்தில் பாலாஜி

post image

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.

அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின் படி, இந்த நெரிசலில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 12 பேர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களைக் காண தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுபடி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனையில் இருக்கிறார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது...

"கரூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவர்களும் உடனடியாக பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக நாமக்கல், சேலம் மாவட்ட மருத்துவர்களும் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

தேவையான அளவிற்கு மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் இருக்கின்றன. மருத்துவர்களும் இருக்கிறார்கள். தகுந்த சிகிச்சை அளிக்கப்படும்.

தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது". எனத் தெரிவித்திருக்கிறார்.

கரூர்: தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழப்பு - விஜய் மீது எஃப்.ஐ.ஆர்

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அதில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தவெக 10,000 பேருக்கு மட்டுமே முன் அனுமதி பெற்றுள்ளது. தற்போது வரை கிடை... மேலும் பார்க்க

'இத்தனை குழந்தைங்க செத்து போய்ட்டாங்களே; படிச்சி படிச்சி சொன்னாங்களே'- கதறி அழுத அன்பில் மகேஷ்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் மக்களைச் சந்தித்து, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கிட்டத்தட்ட 35-க்கும்... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: `அதிர்ச்சி சம்பவம்; முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்'- நயினார் நாகேந்திரன், தமிழிசை

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின் படி, இந்த நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து... மேலும் பார்க்க

கரூர் தவெக கூட்ட நெரிசல்: ``இழப்பீடு போதாது இன்னும் அதிகரிக்க வேண்டும்" - திருமாவளவன் கோரிக்கை!

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்... மேலும் பார்க்க

கரூர்: ``வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்'' - விஜய் செல்வதென்ன?

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கூட்ட நெரிசலில் 31க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளன... மேலும் பார்க்க

கரூர் தவெக கூட்ட நெரிசல்: ``கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது" - சீமான்

தவெக தலைவர் விஜய்-ன் அரசியல் பரப்புரை கரூரில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். பலர... மேலும் பார்க்க