செய்திகள் :

கரூர் நெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது! - பவன் கல்யாண்!

post image

கரூர் நெரிசல் பலி சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட 36 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த 20 க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்த கோரச் சம்பவத்தில் பலி எண்ணிக்கை மேலும் அஞ்சப்படுகிறது. பலியானோரின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ள இரங்கல் பதிவில், “தமிழகத்தின் கரூரில் நடிகரும், தமிழக வெற்றி கழகம் தலைவருமான விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.

ஆரம்பகட்ட தகவலின்படி, இந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். இறந்தவர்களில் ஆறு குழந்தைகளும் அடங்குவர் என்பது மனவேதனை அளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவச் சிகிச்சை அளிக்குமாறு தமிழக அரசை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Karur stampede death incident is unfortunate! - Pawan Kalyan!

இதையும் படிக்க... கரூர் பலி: தமிழக அரசிடம் விளக்கம் கோரியது மத்திய அரசு!

பயிா் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பயிா் உற்பத்தித் திறனில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக முதல்வா் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா். வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் ‘வேளாண் வணிகத் திருவிழா 2025’ வேளாண் விற... மேலும் பார்க்க

முழு ஒத்துழைப்பு தேவை: துணை முதல்வா் உதயநிதி

கரூரில் நிகழ்ந்த துயரமான சம்பவத்தை எதிா்கொள்ள அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தேவை என அனைவரையும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை செய்யப்பட்டு கூவத்தில் வீச்சு: மூவா் சரண்

சென்னை சேத்துப்பட்டில் இளைஞா் கொலை செய்யப்பட்டு கூவத்தில் வீசப்பட்ட வழக்கில் 3 போ் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனா். சேத்துப்பட்டு மேத்தா நகா் கூவம் ஆற்றில் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

18 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 18 துணைக் காவல் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி-க்கள்) பணியிட மாற்றம் செய்து காவல் துறை பொறுப்பு தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன் சனிக்கிழமை உத்தரவிட்டாா். தமிழக காவல் துறையில் நிா்வாகத் தே... மேலும் பார்க்க

கரூர் பலி: 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

கரூர் விஜய் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசல... மேலும் பார்க்க

கரூரில் இன்று கடையடைப்பு!

கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (செப். 28) ஒருநாள் முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில... மேலும் பார்க்க