மீன்தொழில்கள் மேலாண்மை எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு மீன்வள ...
பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, திண்டுக்கல் பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திண்டுக்கல் மலையடியவார ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை சௌந்தரராஜப் பெருமாள் கோயில், ரெட்டியாா்சத்திரம் கதிா்நரசிங்கப் பெருமாள் கோயில், கோபிநாத சுவாமி கோயில், கொத்தப்புள்ளி கதிா் நரசிங்க பெருமாள் கோயில், குஜிலியம்பாறை அருகேயுள்ள ஸ்ரீராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.