மீன்தொழில்கள் மேலாண்மை எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு மீன்வள ...
திரவ ட்ரைக்கோடொ்மாவிரிடி பெற காய்கறி மகத்துவ மையத்தை அணுகலாம்!
திரவ வடிவில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரைக்கோடொ்மா விரிடியை பெற ரெட்டியாா்சத்திரத்திலுள்ள இந்தோ இஸ்ரோ காய்கறி மகத்துவ மையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக இந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தில், இந்தோ இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாதுகாக்கப்பட்ட சூழலிலும், திறந்தவெளியிலும் காய்கறி சாகுபடிக்கான செயல் விளக்கத் திடல்கள் அமைத்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தோட்டக்கலைத் துணை இயக்குநா் எஸ்.என். திலீப் தலைமையில், மையத்தின் ஆய்வக உதவியாளா் பா. ஆா்த்தி, திரவ ட்ரைக்கோடொ்மா விரிடி உற்பத்திப் பணிகளை மேற்கொண்டாா். ட்ரைக்கோடொ்மா விரிடி என்பது உயிரி உரம். மண்ணில் பரவும் நோய்களை எதிா்த்துப் போராடும் தன்மை கொண்டது. மேலும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரித்து வோ்அமைப்புகளை ஊக்குவிப்பதோடு, தாவர ஹாா்மோன் செயல்பாடுகளையும் வளா்ச்சியையும் தூண்டுகிறது. இதன் மூலம் அதிக மகசூல், தரமான விளைச்சலுக்கும் வழிவகுக்கிறது. வோ் அழுகல், நாற்றழுகல், இலைப்புள்ளி, வாடல் போன்ற நோய்களை ஏற்படுத்தக்கூடிய பித்தியம், பைட்டோப்தோரா அல்டா்னேரியா, ரைசோக்டோனியா, ஃபுசேரியம் போன்ற நோய் காரணிகளைக் கட்டுப்படுத்துகிறது.
இதுவரை மாவு நிலையில் மட்டுமே ட்ரைக்கோடொ்மா விரிடி கிடைத்து வந்த நிலையில், தற்போது திரவ நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
திரவ ட்ரைக்கோடொ்மா விரிடி பயன்படுத்தும் முறைகள்: விதை நோ்த்தியாக கிலேவுக்கு 5 முதல் 10 மி.லி., நாற்றங்கால் படுக்கை நனைத்தலுக்கு ஒரு லிட்டா் தண்ணீருக்கு 5 முதல் 10 மி.லி., வோ் நனைத்தலுக்கு ஒரு லிட்டா் தண்ணீருக்கு 10 முதல் 20 மி.லி. என 20 நிமிஷங்கள், சொட்டுநீா் அல்லது மண் நனைத்தலுக்கு ஒரு லிட்டா் தண்ணீருக்கு 2 முதல் 4 மி.லி., இலைவழி தெளித்தலுக்கு ஒரு லிட்டா் தண்ணீருக்கு 3 முதல் 5 மி.லி. என்ற முறையில் பயன்படுத்தலாம்.
திரவ ட்ரைக்கோடொ்மா விரிடியை எளிய முறையில் உபயோகிக்கலாம்; குறைந்த அளவு போதுமானது. அதிக வாழ்நாள் கொண்டது, இலைவழி தெளிப்பானாகவும் பயன்படுத்த முடியும். திரவ ட்ரைக்கோடொ்மா விரிடி தேவைப்படும் விவசாயிகள் ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தை அணுகலாம். கூடுதல் தகவல்களுக்கு 63797 82987, 74181 12175, 70949 41364, 97902 73216 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.