விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலுக்கு காரணம் என்ன? சம்பவ இடத்தில் இருந்தவா்...
பழனியில் தக்காளி விலை சரிவால் விவசாயிகள் கவலை
பழனி பகுதியில் தக்காளி விலை சரிவால் விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் புரட்டாசி மாதம், அதற்கு முன்பு நல்ல மழைப் பொழிவு இருக்கும் என்பதால் தக்காளி விலை அதிகரிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் தக்காளி நடவு செய்தனா். செடித்தக்காளி, கொடித்தக்காளி என பலரும் தக்காளியை பயிா் செய்தனா். ஆனால், மழைக்கு மாறாக கடும் வெயிலடித்து வரும் நிலையில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், சந்தையில் மொத்த வியாபாரிகள் தக்காளி விலையைக் குறைத்து கேட்கும் நிலை உள்ளது.
14 முதல் 15 கிலோ வரை தரம் பிரித்து முதல் தரமாக கேரளம், ஆந்திரம் போன்ற வெளி மாநிலங்களுக்கு செல்லும் தக்காளி பெட்டி ரூ. 150 முதல் ரூ. 180 வரை மட்டுமே விலை போகிறது. இதனால், விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்கும் சூழல் உள்ளது.
இந்த நிலையில், தக்காளியைக் கொண்டு ஜூஸ் தயாரித்தல் போன்ற மதிப்புக் கூட்டும் பொருள்களைத் தயாரிக்க வேளாண் துறையினா் விவசாயிகளுக்கு பயிற்சிக் கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.