விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலுக்கு காரணம் என்ன? சம்பவ இடத்தில் இருந்தவா்...
கொடைக்கானலில் உலக சுற்றுலா தின விழா
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உலக சுற்றுலா தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் சுற்றுலாவின் சமூக, கலாசார, அரசியல், பொருளாதார மதிப்பு, நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவதற்கு சுற்றுலாத் துறையின் பங்களிப்பு குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டது. இந்த ஊா்வலத்தை பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) கீதா தொடங்கிவைத்தாா். இதில் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக மாணவிகள், சுற்றுலாத் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இந்த ஊா்வலமானது அண்ணாசாலை, செவன்ரோடு, ஏரிச்சாலை பகுதியில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் படகு குழாம் பகுதியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து, உலக சுற்றுலா தினம் சாா்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு பரிசுகள் வழங்கினாா்.
பின்னா், ஏரிச்சாலைப் பகுதியை தூய்மையாக வைத்திருப்பது குறித்து மாணவிகள், பல்வேறு துறை சாா்ந்த பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். இந்த நிகழ்ச்சியில், கொடைக்கானல் வட்டாட்சியா் பாபு, படகு குழாம் மேலாளா் காதா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, சுற்றுலா அலுவலா் கோவிந்தராஜ் வரவேற்றாா். உதவி சுற்றுலா அலுவலா் சுதா நன்றி கூறினாா்.