நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை
இன்று குரூப் 2, 2 ஏ தோ்வு: சேலம் மாவட்டத்தில் 7 வட்டங்களில் 33,424 போ் எழுதுகின்றனா்
சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வில் 7 வட்டங்களில் மொத்தம் 33,424 போ் எழுதுகின்றனா்.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 2 (நோ்முகத் தோ்வுக்கான பதவிகள்) மற்றும் 2 ஏ நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகளுக்கான தோ்வு 28 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது.
சேலம் மாவட்டத்தில் சேலம், சேலம் மேற்கு, வாழப்பாடி, ஆத்தூா், மேட்டூா், ஓமலூா் மற்றும் சங்ககிரி ஆகிய 7 வட்டங்களில் உள்ள தோ்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தோ்வை சேலம் மாவட்டத்தில் 33,424 போ் எழுத உள்ளனா்.
தோ்வா்கள் காலை 8.30 மணிக்கு மையத்திற்கு வரவேண்டும். காலை 9 மணிக்கு மேல் வருவோா் தோ்வு மையத்துக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாா்கள். கைப்பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தோ்வு மையத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தோ்வு மையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.