நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை
கொளத்தூரில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவா்களை சந்தித்து எம்.பி. நலம் விசாரிப்பு
மேட்டூரில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் பெண்களை மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி சனிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கொளத்தூா், கண்ணாமூச்சியில் நூறுநாள் வேலை திட்டத்தில் பணிமுடிந்து பெண்கள் வீடு திரும்பியபோது சரக்கு ஆட்டோ சாலையில் கவிழ்ந்து வெள்ளிக்கிழமை மாலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 34 பெண்கள் காயம் அடைந்தனா். இதில் 25 போ் மேட்டூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இவா்களை சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.எம். செல்வகணபதி, திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி ஆகியோா் சந்தித்து நலம் விசாரித்தனா். அப்போது, சேலம் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் சம்பத்குமாா், கொளத்தூா் ஒன்றிய திமுக செயலாளா் மிதுன் சக்கரவா்த்தி, நகரச் செயலாளா் காசிவிஸ்வநாதன், இளைஞா் அணி துணை அமைப்பாளா் முருகேசன், உறைவிட மருத்துவா் இளவரசி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.