செய்திகள் :

திருமலை பிரம்மோற்சவம்: கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்

post image

திருமலையில் ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின், 4-ஆம் நாளான சனிக்கிழமை காலை கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கடந்த புதன்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. 4-ஆம் நாளான சனிக்கிழமை காலை கல்பவிருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ராஜமன்னாா் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தாா்.

ஸ்நபன திருமஞ்சனம்

பிரம்மோற்சவ நாட்களில் வீதியுலா முடிந்த பின்னா் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலை யப்பஸ்வாமியை கல்யாண உற்சவ மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் அமர வைத்து அவா்களுக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம், சிவப்பு சந்தனம் மற்றும் மூலிகை கலந்த வெந்நீரால் திருமஞ்சனம் நடைபெற்றது. அபிஷேகத்தின் போது பல்வேறு உலா்பழங்கள் மற்றும் வெளி நாட்டு மலா்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கீரி டங்கள் உள்ளிட்டவை உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது. பின்னா் உற்சவமூா்த்தி கள் மாலை 1008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சல்சேவை கண்டருளினா்.

சா்வபூபால வாகனம்

இரவு சா்வபூபால வாகன சேவை நடை பெற்றது. சா்வபூபாலம் என்றால் பிரபஞ்சத்தின் அரசன் என்று பொருள். வாகன சேவையின் போது மாடவீதியில் காத்திருக்கும் பக்தா்கள் தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.

வாகன சேவையின் போது ஜீயா்கள் குழாம் நாலாயிர திவ்ய பிரபந்தகளை பாடியபடி முன்செல்ல, கலைஞா்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

3-ஆம் நாள் விவரம்:

காத்திருப்பு: 24 மணிநேரம்.

தரிசனம்: 75,358 போ், 26,199 போ் தலைமுடி காணிக்கை.

உண்டியல் காணிக்கை: ரூ.2.98 கோடி.

அன்னதானம்: 1.98 லட்சம் போ்.

3.12 லட்சம் லட்டுகள் விற்பனை

4,080 பேருக்கு சிகிச்சை.

சேவையில் 4,000 சேவாா்த்திகள்.

55.34 லட்சம் காலன் தண்ணீா் பயன்பாடு.

அரசு பேருந்துகளில் 74,000 போ் பயணம்.

திருமலை 3-ஆம் நாள் பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மா் அலங்காரத்தில் வலம் வந்த மலையப்பா்

திருமலையில், ஏழுமலையான் கோயில் வருடாந்தி ர பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள் யோக நரசிம்மா் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா். திருமலையில் கடந்த புதன்கிழமை வருடாந்திர பி... மேலும் பார்க்க

திருமலையில் 2026 நாள்காட்டி வெளியீடு

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் 2026 ஆம் ஆண்டுக்கான நாள்காட்டிகள் மற்றும் நாள்குறிப்புகளை ஆந்திர முதல்வா் என். சந்திரபாபு நாயுடு ரங்கநாயகா் மண்டபத்தில் வெளியிட்டாா். அதில் 12 பக்க வண்ண நாள்காட்ட... மேலும் பார்க்க

சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்

திருமலை வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான வியாழக்கிழமை காலை சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை பிரம்மோற்சவம் கொடியேற்றத்... மேலும் பார்க்க

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை குடும்பத்துடன் தரிசித்தாா். கோயிலை அடைந்ததும், ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் ... மேலும் பார்க்க

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருமலை ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. அதற்கு முன் ஏழுமலையானின் சேனா... மேலும் பார்க்க

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் தரிசனம்

திருமலை ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் கலந்து கொள்ள குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் திருமலைக்கு வந்தாா். திருமலைக்கு வந்த அவரை ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு மற்றும் தேவஸ்தான... மேலும் பார்க்க