திருமலையில் 2026 நாள்காட்டி வெளியீடு
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் 2026 ஆம் ஆண்டுக்கான நாள்காட்டிகள் மற்றும் நாள்குறிப்புகளை ஆந்திர முதல்வா் என். சந்திரபாபு நாயுடு ரங்கநாயகா் மண்டபத்தில் வெளியிட்டாா்.
அதில் 12 பக்க வண்ண நாள்காட்டி, 6 பக்க வண்ண நாள்காட்டி, ஒரு பக்க ஏழுமலையான் நாள்காட்டி, ஒரு பக்க பத்மாவதி தாயாா் நாள்காட்டி, ஏழுமலையான் பத்மாவதி தாயாா் இணைந்த ஒரு பக்க நாள்காட்டி, தெலுங்கு பஞ்சாங்க நாள்காட்டி, பெரிய டைரி, சிறிய டைரி, டேபுள் டாப் நாட்காட்டி உள்ளிட்டவை அடங்கும்.
இவை இன்னும் விற்பனைக்கு வைக்கப்படவில்லை. விற்பனைக்கு வைக்கப்பட உள்ள தேதி விரைவில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.