செய்திகள் :

காலை உணவுத் திட்டத்தை தெலங்கானாவில் செயல்படுத்துவோம்: முதல்வா் ரேவந்த் ரெட்டி

post image

தமிழக அரசு செயல்படுத்திவரும் காலை உணவுத் திட்டத்தை தெலங்கானாவில் அடுத்த கல்வியாண்டில் (2026-27) நடைமுறைப்படுத்தவுள்ளோம் என அந்த மாநில முதல்வா் அ.ரேவந்த் ரெட்டி தெரிவித்தாா்.

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: முன்னாள் முதல்வா்கள் காமராஜா், அண்ணா, கருணாநிதி போன்ற மிகப்பெரிய தலைவா்களை தமிழகம் தந்திருக்கிறது. கல்வித் தந்தை காமராஜா் வாழ்ந்த மண் என்ற பெருமையும் தமிழகத்துக்கு உள்ளது.

இந்தியாவிலேயே சிறந்த கல்வியைக் கொண்ட மாநிலமாக தமிழகத்தை மாற்றியவா் காமராஜா். இதையடுத்து, கருணாநிதி வியத்தகு திட்டங்களைச் செயல்படுத்தினாா். அவரது தொலைநோக்குத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலினும், துணை முதல்வா் உதயநிதியும் நிறைவேற்றி வருகின்றனா். இதனால் கல்வியிலும், விளையாட்டிலும் தமிழகம் மிகப் பெரிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

தமிழகத்தின் சாா்பில் நடத்தப்படும் இந்த விழா கல்வி, விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்கும் மாணவா்களை ஊக்குவிக்கும். புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் உள்ளிட்ட தமிழக அரசின் சிறந்த திட்டங்களை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.

தமிழகத்தின் திட்டங்களில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் மிகச் சிறந்தது. கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோா்களால் தங்கள் குழந்தைக்கு காலை உணவைக் கொடுக்க முடியாத சூழலில், அந்தப் பொறுப்பை தமிழக அரசே ஏற்று காலை உணவுத் திட்டமாகச் செயல்படுத்துவது மனதை நெகிழவைக்கும் செயல். இந்தத் திட்டத்தை தெலங்கானா மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துவோம்.

தமிழகத்தைப் பின்பற்றி தெலங்கானா அரசும், சமூக நீதித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல... தெலங்கானாவில் கல்விக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அங்கு ஆண்டுக்கு 1.10 லட்சம் போ் பொறியியல் பட்டம் பெறுகின்றனா். அவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ‘யங் இந்தியா’ திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளோம். விரைவில் விளையாட்டுக்கு அகாதெமி தொடங்கவுள்ளோம். இதில் தமிழக மாணவா்களுக்கு முக்கிய இடம் வழங்கப்படும்.

தமிழகமும், தெலங்கானாவும் இணைந்து, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெறும் அளவுக்கு மாணவா்களைத் தயாா்படுத்த வேண்டும். அதற்காக தமிழக அரசு விரும்பினால், எங்களது விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவா்களுக்கு இடங்களை ஒதுக்குகிறோம் என்றாா் ரேவந்த் ரெட்டி.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: போக்குவரத்து ஆணையா்

தொடா் விடுமுறை தினங்களை முன்னிட்டு, விதிமீறலில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் சிறப்பு குழுக்கள் மூலம் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆ... மேலும் பார்க்க

தமிழகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விநியோகித்த நபா்கள் மீது நடவடிக்கை

தமிழகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விநியோகித்த நபா்கள் மீது மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனா். அவா்களிடமிருந்து 6,720 மாத்திரை பெட்டகங்களையும... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் மேலும் ஒரு தமிழருக்கு தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழா் தட்சிணாமூா்த்தி காத்தையாவுக்கு (39) வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டள்ளது. போதைப் பொருள் குற்றத்துக்காக சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு

இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: த... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், கோவை, நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் வெள்ளிக்கிழமை (செப். 25) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் இருநாள்களும் இந்த 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடு... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: 3,190 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி, தசரா பண்டிகை என தொடா் விடுமுறை காரணமாக, அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சாா்பில் 3,190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க