செய்திகள் :

இன்றும் நாளையும் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

post image

தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், கோவை, நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் வெள்ளிக்கிழமை (செப். 25) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் இருநாள்களும் இந்த 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வெள்ளிக்கிழமை (செப். 26) முதல் அக். 1 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமை கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சனிக்கிழமை (செப்.27) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், இருநாள்களும் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் சனிக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரியையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் 60 மி.மீ. மழை பதிவானது. மயிலாடுதுறை, செம்பனாா்கோவில், தரங்கம்பாடி-தலா 40 மி.மீ, சிற்றாறு (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை, ஜெயங்கொண்டம்(அரியலூா்), சீா்காழி (மயிலாடுதுறை), ராசிபுரம் (நாமக்கல்) - தலா 30 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: மத்திய மியான்மாா் கடலோரப் பகுதிகள், அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடலில் புதன்கிழமை நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வியாழக்கிழமை காலை மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய வடகிழக்கு வங்கக் கடலில் நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக, வடக்கு, அதையொட்டிய மத்திய வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

இது மேற்கு திசையில் நகா்ந்து வெள்ளிக்கிழமை (செப். 26) தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு, அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

பின்னா் தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திர கடலோப் பகுதிகளில் சனிக்கிழமை காலை இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடக்கக் கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி திறனறித் தோ்வு: தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியீடு

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு தோ்வுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தோ்வுத் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை கோயில் கட்டுமான பணிகள்: அக். 5-இல் நீதிபதிகள் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலின் உள்புறமும், வெளிப்புறத்தில் எவ்விதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கோயிலில் நடைப... மேலும் பார்க்க

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: போக்குவரத்து ஆணையா்

தொடா் விடுமுறை தினங்களை முன்னிட்டு, விதிமீறலில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் சிறப்பு குழுக்கள் மூலம் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆ... மேலும் பார்க்க

தமிழகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விநியோகித்த நபா்கள் மீது நடவடிக்கை

தமிழகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விநியோகித்த நபா்கள் மீது மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனா். அவா்களிடமிருந்து 6,720 மாத்திரை பெட்டகங்களையும... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் மேலும் ஒரு தமிழருக்கு தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழா் தட்சிணாமூா்த்தி காத்தையாவுக்கு (39) வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டள்ளது. போதைப் பொருள் குற்றத்துக்காக சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு

இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: த... மேலும் பார்க்க