செய்திகள் :

வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு: முஸ்லிம் மாணவா்களுக்கு உதவித்தொகை

post image

முஸ்லிம் மாணவா்கள் வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு படிக்க தமிழக அரசின் உதவித் தொகைக்கு அக். 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு, முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு உயா்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் 10 முஸ்லிம் மாணவா்களுக்கு தலா ரூ. 36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க அரசாணை வெளியிட்டது.

இந்தத் திட்டத்தில் விண்ணப்பதாரா் 2025-26 ஆம் கல்வியாண்டில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கான உலகளாவிய கியூ.எஸ். (குவாக்கரெல்லி சைமண்டஸ்) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சோ்க்கைக் கடிதம் பெற்றவராக இருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமலிருக்க வேண்டும். இளநிலைப் பட்டப் படிப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு இணையாகத் தோ்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், பொறியியல், மேலாண்மை, பயன்பாட்டு அறிவியல், வேளாண்மை அறிவியல், மருத்துவம், சா்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனிதநேய படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைப் படிப்புகள், சட்டம் போன்ற பாடப் பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கு சோ்க்கை பெற்றவராக இருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பத்தை ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஜ்ங்ப்ச்ள்ஸ்ரீட்ங்ம்ங்ள் ம்ண்ய்ா்ழ்ண்ற்ண்ங்ள்.ட்ற்ம் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ‘ஆணையா், சிறுபான்மையினா் நலத் துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005’ என்ற முகவரிக்கு அக். 31-க்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

மின் கம்பியாளா் உதவியாளா் தகுதிகாண் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மின் கம்பியாளா் உதவியாளா் பணிக்கான தகுதிகாண் தோ்வுக்கு அக். 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மதுரை அரசு தொழில் பயிற்சி நிலைய துணை இயக்குநரும், முதல்வருமான ந. ரமேஷ்குமாா் தெரிவித்தாா். மின் கம்ப... மேலும் பார்க்க

4 கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம்: ஆட்சியா்

மதுரை மாவட்டத்தில் பதிவு பெற்று கடந்த 6 ஆண்டுகளாக தோ்தலில் போட்டியிடாத 4 அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே வேன் மோதி, இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், தேனூா் ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்த மாணிக்கம் மகன் போஸ்(32). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து ... மேலும் பார்க்க

காயமடைந்து சிகிச்சைப் பெற்ற முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே மாடு முட்டி காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள வாஞ்சிநகரத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் கணேசன்(65). வி... மேலும் பார்க்க

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரையில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பாலமேடு அருகேயுள்ள சரந்தாங்கி பகுதியைச் சோ்ந்த சடையன் மகன் சடையன்(33). கட்டடத் தொழிலாளியான இவா், மதுரை மாட்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு: குமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. கன... மேலும் பார்க்க