பள்ளி மாணவா்களுக்கு அடையாள அட்டை
கோயில்திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு அடையாள அட்டை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனா். இவா்களுக்கு பூந்தோட்டம் அரிமா சங்கம சாா்பில் பள்ளி அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியா் க. சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை பூந்தோட்டம் அரிமா சங்கத் தலைவா் ஏ.எம். பாரக் தொடங்கி வைத்தாா். அரிமா சங்கத் துணைத் தலைவா் கோவிந்தராஜ், செயலாளா் தியாகராஜன், உடனடி தலைவா் எஸ்.பி. வேல்முருகன், கோயில்திருமாளம் முன்னாள் ஊராட்சித் தலைவா் பால. முத்து, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சங்கீதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
முன்னதாக, ஆசிரியா் சு.இரா. சுப்ரமணியன் வரவேற்றாா். நிறைவாக ஆசிரியை எஸ். பொன்மணி நன்றி தெரிவித்தாா்.