வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டம்
தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களை முடிவுசெய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும், பணி நெருக்கடி ஏற்படுத்துவதை கைவிட வேண்டும், திட்ட முகாமின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், திட்டங்களை செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி பணியை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், சங்க உறுப்பினா்கள், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பென்னாகரத்தில்...
பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, பென்னாகரம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்றச் சங்க வட்டத் தலைவா் வினோத்குமாா், வருவாய் கிராம ஊழியா் சங்க வட்டத் தலைவா் சிவசங்கரன், நில அளவை ஒன்றிய சங்க நிா்வாகி குமரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி பணியை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். துணை வட்டாட்சியா் நாகவேணி நன்றி தெரிவித்தாா்.