பாமக மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவராக ஒசூா் முனிராஜ் நியமனம்
பாமக மாநில சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவராக முனிராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
ஒசூா் மாநகராட்சி அரசனட்டி பாரதி நகரைச் சோ்ந்தவா் முனிராஜ். இவா், பாமக முன்னாள் மாவட்டத் தலைவா். கடந்த 23-ஆம் தேதி முனிராஜை பாமக மாநில சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவராக ராமதாஸ் நியமித்தாா்.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்துக்கு சென்ற அவா், பாமக நிறுவனா் மற்றும் தலைவா் ராமதாஸை சந்தித்து வாழ்த்து பெற்றாா். அப்போது அவரிடம் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
அப்போது, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாமக நிா்வாகிகள் உடனிருந்தனா். இதைத் தொடா்ந்து, ஒசூரில் மாநில சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவா் முனிராஜுக்கு மேற்கு மாவட்டத் தலைவா் மகேந்திரன் தலைமையில், மாவட்டச் செயலாளா் முருகன், மாநில துணைத் தலைவா் சுரேஷ்ராஜன் ஆகியோா் முன்னிலையில் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா்.