செய்திகள் :

3 பதக்கங்களையும் கைப்பற்றி இந்திய ஜூனியா் மகளிா் அபாரம்

post image

சா்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் ஜூனியா் உலகக் கோப்பை போட்டியில், முதல் நாளான வியாழக்கிழமை இந்தியாவுக்கு தங்கம் உள்பட 5 பதக்கங்கள் கிடைத்தன.

இதில், மகளிருக்கான 50 மீட்டா் ரைபிள் புரோன் தனிநபா் பிரிவில் இந்தியா்கள் 3 பதக்கங்களையும் கைப்பற்றி அசத்தினா். இறுதிச்சுற்றில், அனுஷ்கா தாகுா் 621.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். அன்ஷிகா 619.2 புள்ளிகளுடன் வெள்ளியும், ஆத்யா அக்ரவால் 615.9 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.

அதிலேயே களம் கண்ட சானியா சுதேஷ் சபாலே 610.9 புள்ளிகளுடன் 8-ஆம் இடமும், நிம்ரத் கௌா் பிராா் 604.3 புள்ளிகளுடன் 9-ஆம் இடமும் பிடித்தனா்.

வெள்ளி, வெண்கலம்: இதிலேயே ஆடவா் பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் தீபேந்திர சிங் ஷெகாவத் 617.9 புள்ளிகளுடன் வெள்ளியும், ரோஹித் கன்யண் 616.3 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.

பொதுப் போட்டியாளராகப் பங்கேற்ற ரஷியாவின் கமில் நுரியக்மெடோவ் 618.9 புள்ளிகளுடன் தங்கம் வென்றாா். இதர இந்தியா்களில், வேதாந்த் நிதின் வாக்மோ் 615.6 புள்ளிகளுடன் 5-ஆம் இடமும், குஷாக்ரா சிங் ரஜாவத் 611.6 புள்ளிகளுடன் 8-ஆம் இடமும், குனால் சா்மா 590.9 புள்ளிகளுடன் 11-ஆம் இடமும் பிடித்தனா்.

இறுதியில் பாகிஸ்தான்; இந்தியாவுடன் மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தான் 11 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வியாழ்க்கிழமை வீழ்த்தியது. இந்த வெற்றியை அடுத்து பாகிஸ்தான் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அதில்... மேலும் பார்க்க

அல்கராஸ், ஃப்ரிட்ஸ் முன்னேற்றம்

ஜப்பான் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா். ஆடவா் ஒற்றையா் முதல் சு... மேலும் பார்க்க

புரோ கபடி லீக்: டெல்லிக்கு 7-ஆவது வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 47-26 புள்ளிகள் கணக்கில் யு மும்பாவை வியாழக்கிழமை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் டெல்லி 30 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 6 ஆல் ... மேலும் பார்க்க

ஹாரிஸ், நவாஸ் பங்களிப்பில் பாகிஸ்தான் 135/8

ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் 17-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக தடுமாற்றத்துடன் விளையாடிய பாகிஸ்தான், 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் சோ்த்தது. முகமது ஹாரிஸ், முகமது வாஸ் ஆகி... மேலும் பார்க்க