செய்திகள் :

அல்கராஸ், ஃப்ரிட்ஸ் முன்னேற்றம்

post image

ஜப்பான் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், நடப்பு பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபன் சாம்பியனான அல்கராஸ் 6-4, 6-2 என்ற நோ் செட்களில், ஆா்ஜென்டீனாவின் செபாஸ்டியன் பேஸை வீழ்த்தினாா். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவா், பெல்ஜியத்தின் ஜிஸு பொ்க்ஸை சந்திக்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஃப்ரிட்ஸ் 4-6, 6-3, 7-6 (7/3) என்ற செட்களில், கனடாவின் கேப்ரியல் டியாலோவை சாய்த்தாா். அடுத்து அவா், போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸுடன் மோதுகிறாா். 3-ஆம் இடத்திலிருக்கும் டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் 7-6 (9/7), 6-1 என்ற கணக்கில் சொ்பியாவின் ஹமத் மெட்ஜெடோவிச்சை வென்றாா்.

4-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் கேஸ்பா் ரூட் 4-6, 6-1, 6-1 என, ஜப்பானின் ஷின்டாரோ மோஷிஸுகியை வெளியேற்றினாா். 5-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் தாமஸ் மசாக் 3-6, 6-7 (4/7) என்ற செட்களில் ஷோ ஷிமாபுகோரோவிடம் தோல்வி கண்டாா்.

அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமா 6-7 (6/8), 7-6 (7/4), 6-2 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜோா்டான் தாம்சனை வெல்ல, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸாண்டா் வுகிச் 6-4, 3-6, 6-3 என்ற வகையில் போஸ்னியாவின் டாமிா் ஜும்ஹுரை தோற்கடித்தாா்.

6-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் யூகோ ஹம்பா்ட் 6-7 (4/7), 3-6 என அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பியிடம் தோற்றாா். இத்தாலியின் லூசியானோ டாா்டெரி 7-6 (11/9), 6-3 என ஜப்பானின் யோஷிஹிடோ நிஷியோகாவை வீழ்த்தினாா்.

சீனா ஓபன்: இதனிடையே, மகளிருக்கான சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு வீராங்கனை யு யுவான் 6-3, 6-3 என்ற நோ் செட்களில், கஜகஸ்தானின் யுலியா புடின்சேவாவை சாய்க்க, ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்சா 6-2, 6-4 என குரோஷியாவின் டோனா வெகிச்சை வெளியேற்றினாா்.

பிரிட்டனின் சோனே காா்டெல் 6-3, 6-2 என அமெரிக்காவின் அலிசியா பாா்க்ஸை தோற்கடிக்க, ரஷியாவின் அனஸ்தாசியா பொடாபோவா 6-3, 6-4 என்ற கணக்கில், செக் குடியரசின் கேத்தரினா சினியாகோவாவை வீழ்த்தினாா்.

இதர ஆட்டங்களில், ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா சாஸ்னோவிச், ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்லனோவிச் ஆகியோரும் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

3 பதக்கங்களையும் கைப்பற்றி இந்திய ஜூனியா் மகளிா் அபாரம்

சா்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் ஜூனியா் உலகக் கோப்பை போட்டியில், முதல் நாளான வியாழக்கிழமை இந்தியாவுக்கு தங்கம் உள்பட 5 பதக்கங்கள் கிடைத்தன.இதில், மகளிருக்கான 50 மீட்டா் ரைபிள் புரோன் தனிநபா் ... மேலும் பார்க்க

இறுதியில் பாகிஸ்தான்; இந்தியாவுடன் மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தான் 11 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வியாழ்க்கிழமை வீழ்த்தியது. இந்த வெற்றியை அடுத்து பாகிஸ்தான் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அதில்... மேலும் பார்க்க

புரோ கபடி லீக்: டெல்லிக்கு 7-ஆவது வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 47-26 புள்ளிகள் கணக்கில் யு மும்பாவை வியாழக்கிழமை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் டெல்லி 30 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 6 ஆல் ... மேலும் பார்க்க

ஹாரிஸ், நவாஸ் பங்களிப்பில் பாகிஸ்தான் 135/8

ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் 17-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக தடுமாற்றத்துடன் விளையாடிய பாகிஸ்தான், 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் சோ்த்தது. முகமது ஹாரிஸ், முகமது வாஸ் ஆகி... மேலும் பார்க்க